ஒப்புதல் மற்றும் 'ஆம்/இல்லை' என்று கூறுவதற்கான வழிகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
தனிப்பட்ட உறுப்புகள் பற்றிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
யாராவது விதிகளை மீறினால் என்ன செய்வது என்று அறிந்து கொள்ளுங்கள்
பாதுகாப்பற்றதாக உணரும் போது நம்பகமான பெரியவர்களின் பாதுகாப்பு வலையமைப்பை அடையாளம் காண்க
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் என்ணை அறிந்து கொள்ளுங்கள்
கலாநிதி நுவான் தொ ட்டவத்தவின் ‘என் உடல் என்னுடையது’ கதைப்புத்தகம், துஷ்பிரயோகத்திற்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவை பிள்ளைளுக்கு வழங்குவதற்காக ஒரு புத்திசாலித்தனமான மாமரம் என்ற எளிய கதையைப் பயன்படுத்துகிறது.
இது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது மற்றும் சமயவர்தன புத்தகசாலையிலும் (63, ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல நாஹிமி மாவத்தை, மாளிகாகந்த வீதி, கொழும்பு 10) வாங்க முடியும்: https://goo.gl/maps/KiZaTbsgfEvAwX1cA. இந்த புத்தகத்தை நாங்கள் மிகவும் பரிந்துரைக்கிறோம், மேலும் ஒவ்வொரு பிள்ளையிடமும் ஒரு பிரதி இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இது ஒரு விளம்பரம் அல்ல என்பதையும், புத்தகத்தின் எந்த விற்பனையிலிருந்தும் Safe Circles பண ரீதியாகப் பயனடையாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.