மாற்றுத்திறன் எவ்வளவு பொதுவானது என்பதையும் அதன் சில உதாரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்
மாற்றுத்திறனாளிகளே சமூகம் பார்க்கும் விதம் மற்றும் அவர்களுக்கு பதில் அளிக்கும் விதங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
மாற்றுத்திறனாளிகளுடன் மரியாதையுடன் பழகுவதற்கான வழிகளை அறிந்து கொள்ளுங்கள்
ஒரு செயற்பாட்டின் மூலமாக அறிவை சோதியுங்கள்
சிங்களம் அல்லது தமிழ் பேசும் பார்வை புலனற்ற ஒருவரின் அன்றாட கருமங்களில் உதவ உங்கள் நாளிலிருந்து சில நிமிடங்களை உங்களால் செலவிட முடியுமா? அப்படியானால், இன்றே ‘Be My Eyes’ செயலியில் இணையுங்கள்! பார்வை குறைபாடுள்ளவர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளுக்கு பதிலளித்து, அவர்களின் நாளாந்த கருமங்களில் உஙகளால் உதவலாம். உதாரணத்திற்கு அவர்களின் உடை பொருந்துகிறதா, அவர்களின் உணவுப் பொதிகையின் காலாவதி திகதி கடந்துவிட்டதா அல்லது அவர்களின் அலமாரியில் அவர்கள் தேடும் பொருள் எங்குள்ளது என்பது போன்ற அன்றாடப் பணிகளில் அவர்களுக்கு உதவலாம்.
உங்களால் சிங்களத்தில் உதவ முடியுமெனில்: https://share.bemyeyes.com/invite/5BHLEP9XZ
உங்களால் தமிழில் உதவ முடியுமெனில்: https://share.bemyeyes.com/invite/4PTW2MF6K
"කතා කරමු/ கதைப்போமா" app இன் ஊடாக எந்தவொரு நபரும் எளிதாக சிங்களம் அல்லது தமிழில் எழுத்துக்களை டைப் செய்வதன் ஊடாக அவற்றை இலகுவாக பேசும் வார்த்தைகளாக மாற்றிக் கொள்ளலாம்.
பேசும் திறனற்றவர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ளவர்களுடன் கதைப்பதற்கு இச் செயலி வழி வகுக்கும்.
இந்த செயலியானது E.A.S.E. அறக்கட்டளை மற்றும் Yaala Labs (Pvt) Ltd உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
இதனை உங்கள் Android சாதனத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன் படுத்த இங்கே கிளிக் செய்யவும்.