ஒப்புதல் தெரிவித்தல்
ஒப்புதல் தெரிவித்தல்
இச்செயலமர்வு 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டது. இதன் குறிக்கோள்களாவன, "ஒப்புதல் தெரிவித்தல்" தொடர்பான அறிமுகம், ஒப்புதல் செல்லுபடியாகும் மற்றும் செல்லுபடியற்றதாகும் சந்தர்ப்பங்கள், ஒப்புதல் கோரும் வழிகள், ஒப்புதல் வழங்குவது மற்றும் மறுப்பது, ஒப்புதல் மீறப்பட்டால் செய்ய வேண்டியவை போன்ற விடயங்களை வழங்குதல்.
ஒப்புதல் தெரிவித்தல் என்றால் என்ன என்பதை அறிதல்
ஒப்புதல் தெரிவித்தல் தொடர்பான விதிகளைக் கற்றுக்கொள்ளுதல்
வாய்மொழி மற்றும் வாய்மொழி அல்லாத ஒப்புதல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் பற்றி அறிதல்
ஒப்புதல் மீறப்பட்டால் என்ன செய்வது என்று அறிதல்