Safe Circles பயிலரங்குகளுக்கான வழிகாட்டி
Safe Circles இன் விளக்கக் காட்சிகள் மூலம் வாழ்க்கையை மாற்ற முடியும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ.
விளக்கக்காட்சிக்கு முன்
உங்கள் சமூகத்தில் உள்ள பிள்ளைகளுக்கும் அவர்களைப் பாதிக்கும் சிக்கல்களுக்கும் பொருத்தமான ஒரு தலைப்பைத் தேர்வுசெய்யவும்.
பயிலரங்குக்கான சிறந்த இடத்தை தீர்மானித்தல் - அது பாடசாலை, கோவில், தேவாலயம், பள்ளி, சனசமூக நிலையமாக அல்லது வீடாகவோ இருக்கலாம்.
உள்ளடக்கத்தை எவ்வாறு வழங்குவது என்பதை தீர்மானித்தல். முடிந்தால் விளக்கக் காட்சிக்கான ப்ரொஜெக்டர் மற்றும் திரைக்கான அணுகலைப் பெற முயற்சித்தல். இவற்றுக்கான அணுகல் உங்களிடம் இல்லையெனில், விளக்கக்காட்சியைப் படிக்க அச்சிடுங்கள். அல்லது உள்ளடக்கங்களை பகிரும் போது, வழிகாட்டியாக பயன்படுத்த உங்கள் தொலைபேசியில் விளக்கக் காட்சியை திறந்தே வைத்திருங்கள். சரியான கருவிகள் அனைத்தையும் வைத்திருப்பதை விட, இந்த அறிவைப் பகிர்ந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
விளக்கக்காட்சிக்கான திகதி மற்றும் நேரத்தைத் திட்டமிடல், மற்றும் பிள்ளை இருப்பதை உறுதிசெய்ய பிள்ளைகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளருக்கு (ஆசிரியர்/பெற்றோர்) தெரிவித்தல்.
விளக்கக்காட்சி மற்றும் கேள்வி பதில் அமர்வின் போது
கனிவான தொனியில் பேசுவதன் மூலம் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொள்ளுங்கள். அறையில் உள்ள அனைவருக்கும் உங்களை தெளிவாகக் கேட்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அனைத்துக் கேள்விகளையும் பாராட்டுதலுடனும் ஆர்வத்துடனும் பெறுங்கள். எந்தக் கேள்விக்கும் ஆச்சரியமாகவோ அல்லது வருத்தமாகவோ நடந்து கொள்ளாதீர்கள்.
உங்களுக்கு பதில் தெரியாத ஒரு கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால், ஒருபோதும் அனுமானம் செய்யாதீர்கள் அல்லது தவறான பதிலைக் கொடுக்காதீர்கள். அதற்கு பதிலாக, இது ஒரு நல்ல கேள்வி ஆனால் அதற்கான பதில் உங்களுக்குத் தெரியவில்லை, அந்த கேள்வியை மருத்துவரிடம் அனுப்புவீர்கள் என்று கூறுங்கள். இதுபோன்ற கேள்விகளை hi.safecircles@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப தயங்காதீர்கள் மற்றும் மருத்துவர் மிஹித பஸ்நாயக்க உங்களுக்கு பதிலளிப்பார்.
விளக்கக்காட்சிக்குப் பின்
சில Safe Circles பயிலரங்குகள் செயல்பாட்டு யோசனைகள் மற்றும் செயல்பாட்டுத் தாள்களுடன் வருகின்றன. விளக்கக்காட்சியில் உள்ள செய்திகளை பிள்ளைகள் உள்வாங்க உதவுவதற்கு இவற்றைப் பயன்படுத்தவும்.
சில Safe Circles பயிலரங்குகள் வகுப்பறை சுவரொட்டிகளுடன் வருகின்றன. விளக்கக்காட்சிக்குப் பிறகு, வகுப்பறையிலோ அல்லது வீட்டிலோ இவற்றை வைக்கவும், இதன் மூலம் விளக்கக்காட்சியின் சிறப்பம்சங்களைத் தவறாமல் மறுபரிசீலனை செய்ய முடியும்.
கடினமான தனிப்பட்ட அனுபவத்தைப் புகாரளிக்க ஒரு குழந்தை உங்களிடம் வந்தால், குழந்தை தற்போது ஆபத்தில் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கவும், அப்படியானால், 1929 என்ற எண்ணில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை அழைக்கவும். மற்ற சவால்களுக்கு உதவ, ஆதரவளிக்கும் ஆதாரங்களின் பட்டியலை இங்கே காணலாம்.
பிள்ளைகள் பாதுகாப்பான மற்றும் வலுவூட்டும் வாழ்க்கையை வாழ உங்கள் பங்களிப்பை செய்ததற்கு நன்றி.
Safe Circles பயிலரங்குகள் பற்றி மேலும் ஏதேனும் கேள்விகள் உள்ளதா? hi.safecircles@gmail.com க்கு எழுதவும் - உங்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்!