Safe Circles என்றால் என்ன?

சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்ட மூன்று பேரால் இது  தொடங்கப்பட்டது. கல்வி மட்டுமே மாற்றத்திற்கான உண்மையான வழி என்பதை நாங்கள் உணர்ந்து, எங்கள் கல்வி முறைமையில் இல்லாத உள்ளடக்கங்களை உருவாக்கத் தொடங்கினோம். 

நாட்டின் எப்பகுதியிலும் உள்ள எவருக்கும் அவர்களின் சமூகத்தில் உள்ள சிறுவர்களுக்கு முக்கியமான தலைப்புக்களில் தரமான கல்வியை வழங்குவதற்கான வளங்களை வழங்குவதே எமது குறிக்கோள் ஆகும்

குழந்தைக் கல்வி குறித்த உலகளாவிய அதிகாரிகளின் பரிந்துரைகள், இதே போன்ற நாடுகளின் முயற்சிகள், உள்ளூர் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் நாங்கள் தனிப்பட்ட முறையில் களத்தில் நடத்திய பயிலரங்குகளில் கிடைத்த பதில்களால்  எமது உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுகின்றது.

நாங்கள் யார்?

மிஹித பஸ்நாயக்க 

மருத்துவ இளமானி, அறுவை சிகிச்சை இளமானி   - எம்.பி.பி.எஸ்


மிஹித ஒரு மருத்துவ டாக்டராக இருந்து சமூக ஆர்வலராக மாறியவர், அவர் நாடு முழுவதும் குறிப்பாக இனப்பெருக்க சுகாதாம் குறித்த பயிலரங்குகளை நடத்தியுள்ளார். அவர் ஒரு சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதில் ஆர்வமுள்ளவர் மற்றும் சுறுசுறுப்பான மற்றும் நற்பண்புள்ள தன்னார்வ தொண்டராவார். இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக தனது சேவைகளை வழங்குகிறார்.

LinkedIn

நபிலா இம்தியாஸ்

மனித வளங்கள் மற்றும் தொழில்துறை உறவுகள் முதுமானி, சமூக சட்டக் கல்வி இளமானி  

நபிலா ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். திட்டங்களை முன்னெடுத்து செல்வதிலும் Safe Circles இன் தன்னார்வ குழு மற்றும் வெளிப்புற நிபுணர்களை ஒருங்கிணைப்பதிலும் திறமையானவர்கடமை தவறும் அரச திணைக்களங்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கத் தயங்காதவர் மேலும் மாற்றத்துக்காக ஆர்வத்துடன் குரல் கொடுப்பவர்

LinkedIn

அயேஷா ரத்நாயக்க

வணிக நிர்வாக முதுமானி, பட்டய சந்தையாளர், கவுன்சிலிங் மற்றும் உளச்சிகிச்சை டிப்ளோமா  

அயேஷா அவர்கள் மூன்று புத்தகங்கள் எழுதிய, ஐநா பெண்கள் அமைப்புக்கு ஆலோசனை வழங்கும் எழுத்தாளர் ஆவார். அவர் இலங்கையின் முதல் விளக்காட்சி நிறுவனத்தின் இணை நிறுவனரும், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். கல்விச் சீர்த்திருத்தத்தில் ஆர்வமுள்ள அவர், Safe Circles இன் உள்ளடக்கங்களை துல்லியமானதாகவும், தகவல் தரக்கூடியதாகவும் மற்றும் பார்வைக்கு ஈர்க்கக்கூடியதாகவும் வடிவமைக்கிறார்

LinkedIn

தன்னார்வலர்கள்

Safe Circles ஆனது பல தன்னார்வலர்களின் ஆதரவால் தொடர்ந்து பயனடைகின்றது.

அப்துல் ஹபீல்

தமிழ் மொழிபெயர்ப்பு 

அன்னா ஜெயராஜ்  

தமிழ் மொழிபெயர்ப்பின் தரம் பார்த்தல்

அனுஷ்க ஃபர்னான்டோ

பட்டறைகளை நடாத்துதல்

ஹிமேஷா வீரசிரி

பட்டறைகளை நடாத்துதல்

இஜாஸ் முபாரக் 

தமிழ் மொழிபெயர்ப்பு 

நயனதாரா ஜயதிலக 

சிங்கள மொழிபெயர்ப்பின் தரம் பார்த்தல்

நயோமி நிலூஷா பெருமாள்

பட்டறைகளை நடாத்துதல்

சான்றுறை

Safe Circles இனை பற்றி பாடசாலை அதிபர்கள் என்ன கூறுகிறார்கள் பற்றி அறிந்து கொள்ள இங்கே பார்வையிடவும்!